கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி நேற்றிரவு (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
பரந்தன் பகுதியை சேர்ந்த 29 மற்றும் 34 வயதான இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.